சென்னை: வருவாய் ஈட்டும் தந்தை சிறார்களை கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருந்து தப்பிப்பதை பொறுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவாகரத்து தொடர்பான வழக்கில் ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்தார். குழந்தைகளின் கல்வி, வாழ்க்கைக்கு தேவையான செலவுகளை மேற்கொள்வது தந்தையின் கடமை. ஜீவனாம்சம் கோரி மனுதாக்கல் செய்யாவிட்டாலும் அதை வழங்கும்படி உத்தரவிட நீதிமன்றங்களுக்கு அதிகாரமுள்ளது என நீதிபதி கூறினார்.
