சென்னை: வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்கு வரும் பக்தர்களக்கு முக கவசம், சமூக இடைவெளி கட்டாயம் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார். தமிழகஅரசு புத்தாண்டு கொண்டாடங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படாத நிலையில், வைகுண்ட ஏகாதசிக்கு கட்டப்பாடு விதித்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, முககவசம், சமூக இடைவெளி போன்றவை நடைமுறையில் இருப்பதால் […]
