20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழ்நாடு அரசு அதிரடி!

இந்தியா முழுவதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு உத்தரவு ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 1ம் தேதி அன்று வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கான உத்தரவு மட்டுமே ஜனவரி 1ம் தேதி வெளியாகி வருகிறது. ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கான பேனல் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஜனவரிக்கு பிறகே நடத்தப்பட்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இந்த பதவி உயர்வுக்கான பேனல் கமிட்டி ஆலோசனை கூட்டம் காலதாமாக நடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதே சமயம் தீயணைப்பு துறை புதிய டிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் ஊர்க்காவல் படை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவியும் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு காவல் துறையின் தலைமையக ஏடிஜிபி வெங்கட்ராமன், கூடுதல் பொறுப்பாக காவல் துறை நிர்வாக பிரிவை கவனிப்பார் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், காவல் துறை பொது பிரிவு ஐஜியாக செந்தில்குமார், கடலோர பாதுகாப்பு குழுமம் டிஐஜியாக கயல்விழி நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதேபோல் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜியாக பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்ட எஸ்பியாக முத்தரசி, ஆவடி போக்குவரத்து துணை ஆணையராக ஜெயலட்சுமி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழக காவல் துறை சட்டம் ஒழுங்கு ஏஐஜியாக உமா, சிபிசிஐடி எஸ்பியாக ரவாளி பிரியா மற்றும் உளவுத் துறை சிறப்பு பிரிவு எஸ்பியாக அருளரசு நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நீலகிரி மாவட்ட எஸ்.பியாக பிரபாகர், தென்காசி மாவட்ட எஸ்.பியாக செந்தில் குமார், நாமக்கல் மாவட்ட எஸ்.பியாக கலைச்செல்வன், தருமபுரி மாவட்ட எஸ்.பியாக ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

ஒரே நேரத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 50க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் காத்திருப்பதாக டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.