வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நிகோசியா: 2025க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதே இலக்காக நிர்ணயித்துள்ளோம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியாக கூறியுள்ளார்.
சைப்ரஸ் சென்றுள்ள ஜெய்சங்கர், நிகோசியா நகரில் நடந்த தொழில் மாநாட்டில் பங்கேற்று பேசியதாவது: உலக பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மூலம் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீட்டிற்கான வலுவான இலக்குகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றியது. 2025க்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதுமே எங்களது இலக்கு.
கோவிட் பெருந்தொற்று காலத்தில், தடுப்பூசி உற்பத்தி செய்யும் மிகப்பெரிய மையங்களில் ஒன்றாக இந்தியா இருந்தது. 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கினோம். உலகமே ஒரே குடும்பம் என்ற இந்தியாவின் நம்பிக்கையே ஜி20 அமைப்பின் மையக்கருத்தாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வரலாற்றில், அதிகபட்சமக நேரடி அன்னிய முதலீடு வந்துள்ளது.
கடந்த நிதியாண்டில், 81 பில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளது. வர்த்தகமும் அதிகரித்து வருகிறது. 2021- 22ல் முதல்முறையாக இந்தயாவின் ஏற்றுமதி 400 பில்லியன் டாலர் ஆக அதிகரித்தது. இந்த ஆண்டு, இதனை 470 பில்லியன் டாலர் ஆக நிர்ணயம் செய்துள்ளோம்.

இந்தியாவின் அதிகமான ஸ்டார்ட் அப் சூழல் இந்தியாவில் உள்ளது. இன்றைய நிலையில், உலகளவில் விநியோக சங்கிலியில் இந்தியா நம்பிக்கையான கூட்டாளியாக மாறியுள்ளது. வணிகத்தை முன்னெடுத்து செல்ல பல்வேறு நாடுகளுடன், இலவச வர்த்தக ஒப்பந்தங்களை செய்து வருகிறோம்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 100 சதவீதம் உறுதிபூண்டுள்ளோம். இதன் ஒரு பகுதியாக மிகப்பெரிய நடவடிக்கையாக வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். இதற்காக ஜி20 அமைப்பின் தலைமை பதவியை பயன்படுத்த விரும்புகிறோம். இதன் மூலம் சுற்றுச்சூழலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என பிரதமர் மோடி நம்புகிறார். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement