கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியை சேர்ந்த நீதிமணி என்பவரது உன் மகன் தொழிலாளி ரஞ்சித்(36). இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 6 வயதுடைய சிறுமியை சம்பவத்தன்று வீட்டில் தூங்க வைத்துவிட்டு தாய் அருகிலுள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தாய் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து போது கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் கதவைத் தட்டி சத்தம் போட்டதும், வீட்டின் உள்ளே இருந்த ரஞ்சித் வெளியே ஓடி வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சிறுமியிடம் விசாரித்த போது, ரஞ்சித் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதை எடுத்து இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரஞ்சித்தை கைது செய்தனர்.