'அவரு யாருனே எனக்கு தெரியாது' – ரிஷப் பண்டை காப்பாற்றிய பஸ் டிரைவர் சொன்னது என்ன?

இந்திய கிரிக்கெட் வீர்ர ரிஷப் உத்தரகண்ட் – டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலையில் கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹரிதுவார் மாவட்டம் ரூர்க்கி பகுதியில் வந்துகொண்டிருந்த போது, தூக்கத்தில் ஓட்டியாதால் சாலையின் டிவைடரில் மோதி விபத்தில் ஏற்பட்டதாக ரிஷப் பண்ட் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அதில் அவர் அதிவேகமாக காரை இயக்கி வந்தது தெரிந்தது. மேலும், கார் மோதிய வேகத்தில் தீ பிடித்து எரிந்தது. அவரின் மெர்சிடிஸ் பென்ஸ் கார் முழுவதுமாக எரிந்து தீக்கரையானது. நல்வாய்ப்பாக ரிஷப் பண்ட் காரில் இருந்து தப்பித்தார். 

காயமடைந்து இந்த ரிஷப் பண்டை அப்பகுதியில் இருந்துவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரிஷப் பண்டை மீட்டவர்களில், ஹரியானா பேருந்து ஓட்டுநரும் ஒருவர். 

விபத்து குறித்து, அவர் கூறுகையில், காயமடைந்தவரை யார் என்று தெரியவில்லை என்றும் உடனடியாக ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டேன் என்றார். ரிஷப் பண்டின் கார் வேகமாக வந்துகொண்டிருந்த நிலையில், எதிர் திசையில் இருந்து சுஷில் மாண் என்ற ஓட்டுநர் பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.  

வேகமாக வந்த கார் டிவைடரில் மோதியவுடன் உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு காரை நோக்கி ஓடியுள்ளார். “முதலில், நான் அந்த கார் பேருந்தை மோதிவிடும் என நினைத்து பயந்தேன். நான் காரை நோக்கி ஓடி வந்தபோது, அதன் டிரைவர் (ரிஷப் பண்ட்) ஜன்னலை உடைத்து பாதி வெளியே வந்திருந்தார். அவர் என்னிடம்,’நான் கிரிக்கெட் ஆட்டக்காரர். எனது செல்போனில் அம்மாவிற்கு போன் செய்யுங்கள் என கூறினார்’. ஆனால், அவரின் மொபைல் அணைந்து போயிருந்தது. 

நான் கிரிக்கெட்டை விளையாட்டை பார்த்து இல்லை. ரிஷப் பண்ட் என்றால் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால், எனது பேருந்தில் இருந்த பலருக்கு அவரை அடையாளம் தெரிந்திருந்தது. அவரை காரில் இருந்து தூக்கிவிட்ட பின், அவரது காரை முழுவதுமாக சோதித்து பார்த்தேன், வேறு யாரும் இருக்கிறார்களா என்று. காரில் இருந்து ரூ. 7-8 ஆயிரம் இருந்தது. அதை ஆம்புலன்ஸில் இருந்த அவரிடமே கொடுத்துவிட்டேன்” என்றாார். 

இதனை தொடர்ந்து, ரிஷப் பண்டை மீட்ட பேருந்து ஓட்டுநர் சுஷில் மாண் மற்றும் நடத்துநர் பரம்ஜித் ஆகியோரை ஹரியானா பேருந்து கழகம் பாராட்டியுள்ளது. அவர்கள் பானிபட் திரும்பியவுடன் பாராட்டு பத்திரமும், கேடயமும் வழங்கி போக்குவரத்து கழகம் சிறப்பித்துள்ளது. மேலும், ரிஷப் பண்டை சரியான நேரத்தில் காப்பாற்றிய இருவரும் மனிதநேயத்திற்கு மற்றொருமொரு உதாரணமாக திகழ்கின்றனர் என ஹரியானா போக்குவரத்து துறை அமைச்சர் மூல் சந்த் சர்மா தெரிவித்துள்ளார். 

விபத்தால் ரிஷப் பண்டின் முன்நெற்றியில் இரண்டு வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன. வலது முட்டி பகுதியில் ஜவ்வு (தசைநார்) கிழிந்துள்ளது. அவரின் வலது கால் மணிக்கட்டு, கணுக்கால், கால்விரல் ஆகியவற்றிலும் காயம் ஏற்பட்டது மற்றும் அவரது முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது ரிஷப் பண்ட் உடல்நலன் முன்னேறி உள்ளதாகவும், இன்று MRI ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிகின்றன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.