இலங்கை சுபீட்ச சுட்டெண் – 2021

இலங்கை சுபீட்சச் சுட்டெண் (SLPI) 2021இல் 0.796 கொண்ட சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்ததுடன், இது, கொவிட்-19 உலகளாவிய பெருந்தொற்றினால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த 2020ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 0.764 உடன் ஒப்பிடுகையில் சிறிதளவு அதிகரிப்பினைக் காட்டியது.

‘பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல்’, ‘மக்கள் நலனோம்புகை’ மற்றும் ‘சமூக பொருளாதார உட்கட்டமைப்பு’ ஆகிய துணைச்சுட்டெண்களில் ஏற்பட்ட சிறிதளவு அதிகரிப்புக்கள் இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சிறிதளவு அதிகரிப்பிற்குப் பங்களித்தன.

2021இல் பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல் துணைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட ஒட்டுமொத்த அதிகரிப்பிற்கு 2020 உடன் ஒப்பிடுகையில், பெயரளவு நியதிகளில் தலைக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொழில்நிலை, கூலிகள் மற்றும் கைத்தொழில் அடர்த்தி என்பனவற்றில் ஏற்பட்ட அதிகரிப்புக்கள் தூண்டுதலாக அமைந்தன.

எனினும், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021இல் காணப்பட்ட ஒப்பீட்டு ரீதியான உயர்ந்த பணவீக்கம் துணைச் சுட்டெண்ணின் மீது பாதகமான தாக்கத்தினைக் கொண்டிருந்தது.

முழுவடிவம்

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20221230_sri_lanka_prosperity_index_2021_t.pdf

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.