இந்திய சினிமாவின் மாஸ்டர்களான கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ‘KH 234’ படத்திற்காக மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களை அதிகபட்சமாக உற்சாகப்படுத்தியுள்ளது. கோலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படமும், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகியவை வணிக ரீதியாக முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் இருக்கின்றன. இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெருகியுள்ளது.
‘பொன்னியின் செல்வன் 2’ படம் ஏப்ரல் 28, 2023 அன்று வெளியான பிறகு, 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் ‘KH 234’ படம் திரைக்கு வர வாய்ப்புள்ளது. ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்தையும் கமல்ஹாசன் விரைவில் முடிக்கவுள்ளார். இதற்கிடையில் இயக்குனர் எச்.வினோத்துடன் ‘KH 233’ படத்தில் கமல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரவப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், மணிரத்தினம் இயக்கும் KH 234 படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் படங்களுக்குப் பிறகு மணிரத்னத்துடன் இது அவரது மூன்றாவது படம் ஆகும்.
திரிஷா கமலுடன் ‘மன்மதன் அம்பு’ மற்றும் ‘தூங்காவனம்’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
Here we go again! #KH234
பயணத்தின் அடுத்த கட்டம்!
#ManiRatnam @Udhaystalin @arrahman #Mahendran @bagapath @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_ @turmericmediaTM pic.twitter.com/ATAzzxAWCL— Kamal Haasan (@ikamalhaasan) November 6, 2022
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள ராங்கி திரைப்படம் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகியுள்ளது. அடுத்ததாக சில பெண்களை மையப்படுத்திய படங்கள் தவிர அஜித்துடன் ‘ஏகே 62’ மற்றும் விஜய்யின் ‘தளபதி 67’ படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.