கர்நாடகாவில் மீண்டும் ஒப்பந்ததாரர் தற்கொலை; 40% கமிஷன் பிரச்சனையா.?

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவிகிதத கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பொதுவாக கான்ட்ராக்டர்கள், ‘தங்களுடைய பேலன்ஸ் க்ளியர் ஆகாது’ என அரசாங்கத்தை எதிர்த்து பேச மாட்டார்கள். ஆனால், இன்று அவர்களே வெளியே வந்து, ‘கர்நாடக பா.ஜ.க அரசு 40% கமிஷன் கேட்கிறார்கள்’ என்று வெளிப்படையாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்கள். அப்படி ஒரு சூழல்தான் கர்நாடகாவில் நிலவுகிறது.

கர்நாடக மாநிலம் மால்பே கடற்கரையில் ரூ.80 லட்சம் செலவில் மிதவை பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை உடுப்பி சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி கடந்த மே மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 100 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் ஒரே நேரத்தில் 100 பேரை தாங்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த பாலத்தின் மையப்பகுதி, கடல் கொந்தளிப்பு காரணமாக சேவை தொடங்கப்பட்ட 3வது நாளே உடைந்தது.

மிதவை பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த 3வது நாளே உடைந்திருப்பது அதன் கட்டுமானம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மிதவை பாலம் கட்டுமானத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பசவராஜ் தலைமையிலான கர்நாடக பாஜக அரசு 40 சதவிகிதம் கமிஷன் பெற்றுக் கொண்டு மிதவை பாலம் கட்டியதே உடைந்து விழ காரணம் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா டிவிட்டரில் குற்றம் சாட்டினார்.

அதேபோல் கர்நாடகா மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட போது ராகுல் காந்தியும், ‘‘நான் 1000 வேலையில்லாத இளைஞர்களை ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போது அவர்கள், திறமை இருந்தும் ஏன் எங்களால் வேலை பெற முடியவில்லை என்று என்னிடம் கேட்டனர். அதே சமயம் 40 சதவீத கமிஷன் குறித்து தங்களது வேதனையை தெரிவித்தனர்’’ என்றார்.

கமிஷன் தொல்லையால் ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்து கொள்வது கர்நாடகாவில் வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில் கர்நாடகாவில் மேலும் ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பாகியுள்ளது.

தலைநகர் பெங்களூருவில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீண்டும் எழுந்துள்ளன.

50 வயதான ஒப்பந்ததாரர் டி.என்.பிரசாத், 16 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அரசு திட்டத்தை முடிக்க பணிக்கப்பட்டார். அரசு நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதால் ஒப்பந்ததாரர் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், கடன் கொடுத்தவர்களின் அழுத்தத்தால், அவர் புதுப்பித்துக் கொண்டிருந்த அதே கட்டிடத்தில் உள்ள ஒரு ஆய்வு பங்களாவில் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்திரபாபு நாயுடு கேவலமானவர்; ஆந்திர முதல்வர் கடும் சாடல்.!

கடந்த ஏப்ரலில், ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, மாநில அமைச்சரவையில் இருந்து கே.எஸ்.ஈஸ்வரப்பா விலக நேரிட்டது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.