சென்னை அடுத்த வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
அப்பொழுது பேசிய அவர் “கோயிலில் இருக்கும் சாமிக்கு சக்தி இருப்பது உண்மை என்றால் நாம் கதறுவதை பார்த்து அந்த சாமியே இறக்கப்பட்டு கோயில் இடங்களில் நீண்ட நாட்களாக குத்தகையில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்கி இருக்கும்.
கோவில் நிலத்தில் ஒரு சென்ட் நிலம் கூட யாருக்கும் பட்டா கொடுக்க முடியாது என நீதிபதி கூறுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவது நீடித்தால் வரும் காலங்களில் தலைமுடி என்ன நிறத்தில் இருக்க வேண்டும் என்பதை கூட நீதிமன்றம் தான் முடிவு செய்யும்” என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பாலகிருஷ்ணரின் இத்தகைய கருத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.