சிவகங்கை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 25 ஆண்டு சிறை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. 2017-ல் டியூசன் படிக்க வந்த சிறுமியை வன்கொடுமை செய்த வெங்கடேசனுக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
