சீனா மற்றும் வடகொரியா சென்று தாக்கும் ஏவுகணைகள்; ஜாப்பான் அதிரடி.!

ஜப்பான் நாட்டிற்கு, சீனா மற்றும் வடகொரியாவுடன் மோதல் இருந்து வருகிறது. வடகொரியா தன்னுடைய ஏவுகணை சோதனையின் சமீபத்திய நடவடிக்கையாக ஜப்பான் கடற்பரப்பை நோக்கி மூன்று குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

இது தொடர்பாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை 08:00 மணிக்கு வடகொரியா தனது முதல் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடற்பரப்பில் ஏவியது என்றும், அதனை தொடர்ந்து சுமார் 08:14 மணிக்கு இரண்டாவது மற்றும் அதிலிருந்து ஒரு நிமிடம் கழித்து மூன்றாவது ஏவுகணையும் ஏவியதாக தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வட கொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் ஜப்பான் பிராந்திய மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது என்று அறிவித்துள்ளது. அதேபோல் சீனாவும் அவ்வப்போது ஜப்பானை அச்சுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் சீனா மற்றும் வடகொரியா வரை நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளை தயாரிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 3,000 கிலோமீட்டர்கள் (1,860 மைல்கள்) வரை பல நீண்ட தூர ஏவுகணைகளை உருவாக்க ஏற்பாடு செய்து வருகிறது. மேலும் 2030ம் ஆண்டுக்குள் அவற்றை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2030 ஆம் ஆண்டு முற்பகுதியில் 2,000 கிமீ தூர ஏவுகணையையும், 2035 ஆம் ஆண்டளவில் வட கொரியாவிலும் சீனாவின் சில பகுதிகளிலும் எங்கும் சென்றடையக்கூடிய 3,000 கிமீ ஹைப்பர்சோனிக் ஏவுகணையையும் நிலைநிறுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதேபோல் ஜப்பான் இந்த மாதம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதன் மிகப்பெரிய இராணுவக் கட்டமைப்பை வெளியிட்டது. அது சீனாவைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை வாங்கவும் மற்றும் நீடித்த மோதலுக்கு அதைத் தயார் செய்யும் நோக்கில் 320 பில்லியன் டாலர் திட்டத்தை ஜப்பான் அரசு வெளியிட்டுள்ளது.

அதற்காக நாட்டின் பாதுகாப்புக்கென்று அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தியில் கூடுதலாக இரண்டு விழுக்காட்டை, அதாவது 320 பில்லியனுக்கு அதிகமான டாலரைச் செலவழிக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜப்பானின் ஆயுதபலத்தை நவீனமயமாக்குவது தவிர, நீண்டதூரம் செல்லும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் குறைந்தது 400 Tomahawk ஏவுகணைகளை வாங்குவதற்கும் இத்திட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பகல் பத்து உற்சவத்தின் 8-வது நாளாக பெருமாள் ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் .

ஜப்பான் அரசு அனுமதியளித்திருக்கும் இப்புதிய திட்டம், நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும், ஆபத்தானது என்றுகூறி, அதற்கு ஆயர்களின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழு, பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்த இருமல் டானிக் குடிச்ச 18 குழந்தைகள் பலி… அதிர்ந்த உஸ்பெகிஸ்தான்… சிக்கிய இந்திய நிறுவனம்!

ஜப்பானின் இராணுவத்தை மிக அதிக வல்லமைகொண்டதாக அமைக்கும் இத்திட்டம், அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது என்றும், இதனை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவராமல் அரசே இதற்கு இசைவு தெரிவித்திருப்பது மக்களாட்சிக்கு முரணானது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.