பாரிஸ்: சீன பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என பிரான்ஸ் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தற்போது, பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா, சீனாவில் கோரத்தாண்டவமாடும் நிலையில், உலக நாடுகளையும் அச்சுறுத்த துவங்கியுள்ளது.
இந்தியாவிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை, மாநில அரசுகளை எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளது.
தற்போது, பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த புதிய வகை கொரோனா ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதையடுத்து இந்தியா, இத்தாலி, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்தது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டிற்கு வரும் சீன பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை நடத்த உத்தரவிட்டுள்ளன. சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரெஞ்சு மக்களை பிரான்ஸ் அரசு வலியுறுத்தி உள்ளது.
சீனாவிலிருந்து பிரான்ஸ் செல்லும் விமானங்களில் பயணிப்போர் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்பெயின் நாட்டிற்கு வரும் சீன பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement