சென்னை: புத்தாண்டை முன்னிட்டு இன்று மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட வருபவர்கள், வாகனங்களை எங்கே நிறுத்தலாம் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இன்று கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட நினைப்பவர்கள், காவல்துறையினரின் அறிவிப்புகளை படித்துவிட்டு செல்வது நல்லது. காவல்துறை கட்டுப்பாடுகள் விவரம்: புத்தாண்டு பிறப்பதற்கு முதல்நாள் (இன்று) மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு புத்தாண்டை வரவேற்பார்கள். […]
