டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்-ல் ஸ்ட்ரீம் ஆகும் அனுபமா பரமேஸ்வரனின் ‛பட்டர்பிளை'

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ‛பட்டர்பிளை' என்ற புதிய படத்தை வெளியிட்டுள்ளது. மிஸ்டரி, த்ரில்லரை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தை காந்தா சதீஷ் பாபு இயக்கியுள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

யாரும் இல்லாத காட்டிற்குள் உள்ள ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் கடத்தி வைக்கப்படுவதில் இருந்து கதை விரிவடைகிறது. எதற்காக அந்த குழந்தைகள் கடத்தப்பட்டனர், அதற்கான காரணம் என்ன என்பதை வெளிப்படுத்தும் படமே “பட்டாம்பூச்சி”. பார்வையாளர்களுக்கு சிலிர்ப்பான மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளாக இந்த படம் இருக்கும்.

இதில் கீதாவாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மலையாளத்தில் பிரேமம் படத்தில் அறிமுகமாகி தனது சுருட்ட முடி அழகாலும், புன்னகையாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தமிழில் ‛கொடி' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானார். தொடர்ந்து திறமையான நடிப்பால் தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் இவர் இந்த படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

படம் முழுவதும் கீதாவை சுற்றியே நகரும் விதமாக உருவாகி உள்ளது. குழந்தைகளை மீட்க அவர் எதிர்கொள்ளும் பல சவால்களும், அனுபவங்களையும் எதிர்கொள்கிறார்.

குழந்தைகள் சின்னு, பன்னுவுக்காக கீதா என்னென்ன சாகசங்களை செய்கிறார், குழந்தைகளை விடுவிக்க அவளால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? அவள் முயற்சியில் வெற்றி பெற முடியுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இப்போது ஸ்ட்ரீமிங் ஆகும் “பட்டர்பிளை”ஐ பார்க்கவும்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாகி உள்ள “BUTTERFLY” படத்தை “Disney Plus HotStar” ல் மட்டும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்!! : https://www.hotstar.com/in/movies/butterfly/1260126754

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.