சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஊட்டியில் 5 டிகிரி செல்சியஸ்: தமிழகத்தில் உள்ள மலைப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாக ஊட்டியில் 5 டிகிரி, கொடைக்கானலில் 7 டிகிரி, குன்னூரில் 10.2 டிகிரி, ஏற்காட்டில் 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நிலப் பகுதிகளான தருமபுரியில் 19.5 டிகிரி, சேலத்தில் 18.6 டிகிரி, வேலூரில் 20.4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
தமிழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழையை உருவாக்கும் காற்று சுழற்சிகள் ஏதும் இல்லாததால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் டிச.31 (இன்று)முதல் ஜன.3 வரை 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். சென்னை, புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.