திருச்சி: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. மின் கசிவால் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
