சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, கொரோனா காலக்கட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 2400 தற்காலிக செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கொரோனா கால நெருக்கடியை சமாளிக்க தேசிய சுகாதார குழுமத்தின் வழி காட்டுதல்படி ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசு விதிமுறைகளை அ.தி.மு.க. அரசு முறையாக கடைபிடிக்காமல் […]
