பாட்னா: கள்ளச்சாராயத்துக்கு 80 பேர் பலியான சம்பவத்தில் முக்கிய நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதில், டில்லியில் பதுங்கியிருந்த ராம் பாபு என்பவரை போலீசார் இன்று(டிச.,31) கைது செய்தனர்.
பீஹாரில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக முதல்வர் நிதிஷ் குமார் உள்ளார். இம்மாநிலத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் கள்ளச்சாரய விற்பனை அதிகரித்து, உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் சரண் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து 30 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலி எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது.
பீஹாரில் சமீபத்தில் கள்ளச்சாராயத்துக்கு அதிக அளவில் பலர் பலியான நிலையில், இந்த விவகாரம் பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. விரிவான அறிக்கையை அளிக்கும்படி அரசையும் கேட்டு கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து, 9 பேர் கொண்ட ஆணைய உறுப்பினர்கள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், கள்ளச்சாராயத்துக்கு 80 பேர் பலியான சம்பவத்தில் முக்கிய நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதில், டில்லியில் பதுங்கியிருந்த ராம் பாபு என்பவரை போலீசார் இன்று(டிச.,31) கைது செய்தனர்.

இதுபற்றி கூறிய பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் கூறுகையில், அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. சம்பவம் நடந்தவுடன் இந்த வழக்கை விசாரித்து வருகிறோம். பெரும்பாலான மக்கள் மதுவிலக்குக்கு ஆதரவாக உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் எனக் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement