புதுடில்லி: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கூகுள் நிறுவனம் வெளியிட்ட டூடுல் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. இந்தாண்டு டூடுலில், கூகுள் நிறுவனம் 2022ம் ஆண்டை நினைவுக் கூர்ந்துள்ளது.
2022ஆம் ஆண்டு இன்றோடு முடிகிறது. இன்றுதான், வார கடைசி நாள், மாத கடைசி நாள், வருடத்தின் கடைசி நாள் ஆகும். தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடுகளால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறைக்கப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டிலும் அதே நிலைமைதான். இது இன்னும் அச்சுறுத்தலாக இருந்தாலும், உலகெங்கிலும் கொரோனாவை அதைக் கட்டுக்குள் வைத்திருக்க உரிய நடைமுறைகளை செயல்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய கூகுள் நிறுவனம் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று இரவு 12 மணியுடன் 2022-ம் ஆண்டு நிறைவடைந்து 2023-வது புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்தாண்டு டூடுலில், கூகுள் நிறுவனம் 2022ம் ஆண்டை நினைவுக் கூர்ந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement