மராட்டிய நடிகை தற்கொலை வழக்கு; காதலனுக்கு சிறையில் சலுகைகள்.!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் துனிஷா சர்மா என்ற நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 20 வயதான நடிகை துனிஷா, படப்பிடிப்பின் போது தேநீர் இடைவேளைக்குப் பிறகு கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்; நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் கதவை உடைத்து திறக்க நேரிட்டதாக வாலிவ் போலீசார் தெரிவித்தனர். நள்ளிரவு 1:30 மணியளவில் படப்பிடிப்பு குழுவினர் நடிகையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ‘அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது சக நடிகரான ஷீசன் முகமது கான், துனிஷாவின் தாயின் புகாரின் அடிப்படையில் தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இருவரும் காதலித்து வந்ததாகவும், 15 நாட்களுக்கு முன்பு பிரிந்ததாகவும், இது துனிஷாவை தற்கொலைக்குத் தள்ளியிருக்கலாம் என்று இந்த வழக்கின் எஃப்ஐஆர் கூறுகிறது.

அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் பாஜக எம்எல்ஏ ராம் கதம், நடிகை தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் “லவ் ஜிஹாத்” சந்தேகம் இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு, அனைத்து கோணங்களிலும் ஆராயப்படும், குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும், துனிஷா ஷர்மாவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்றும் ராம் கதம் கூறினார்.

அதேபோல் துனிஷா ஷர்மா தற்கொலை செய்து கொண்டபோது, அவர் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். என்னை இணை நடிகராகப் பெற்றது அவர் பாக்கியம் என சகநடிகரும், முன்னாள் காதலருமான ஷீசன் முகமது கான் பற்றி அந்த கடிதத்தில் குறிபடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் நடிகை தற்கொலை செய்து கொண்ட அந்த நாளில், இருவரும் சுமார் 15 நிமிடங்கள் மேக்அப் அறையில் பேசியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் துனிஷாவின் 250 பக்க வாட்ஸ்அப் உரையாடல்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். அதேபொல் சகநடிகரும், முன்னாள் காதலனுமான ஷீஷன் கானுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சிறையில் இருக்கும் ஷீஷன் கானுக்கு வீட்டில் இருந்து சமைக்கப்பட்ட உணவு, சிறையில் குடும்பத்தார் சந்திப்பு மற்றும் மருந்துகள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜாதிப்பெயர் கொண்ட பள்ளிகளின் பெயர் மாற்றம்; பஞ்சாப் அரசு அதிரடி.!

அதேபோல் ஷீசன் கான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும் மேலும் அவரது ரகசிய காதலி உடனான பேச்சுக்கள் பற்றி கேட்டபோது, பலமுறை தனது வாக்குமூலங்களை மாற்றிக்கொண்டார் என்று போலீசார் கூறுகின்றனர். மேலும் அவரது வாட்ஸப் உரையாடல்களை பார்க்கும் போது பல பெண்களிடம் அவர் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.