
ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சியின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ஸ்ரீகுமார்
இன்றைய காலக்கட்டத்தில் சினிமாக்களுக்கு இணையாக சீரியல்களும் செண்டிமெண்ட், ரொமான்ஸ், ஸ்டண்ட் காட்சிகள் என பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 'வானத்தைப் போல' தொடரில் ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சியில் ஸ்ரீகுமார் நடித்திருந்தார். சினிமாவில் எடுப்பது போலவே பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் படமாக்கப்பட்ட காட்சி அண்மையில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், அந்த காட்சியின் மேக்கிங் வீடியோவை ஸ்ரீகுமார் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், ஸ்ரீகுமாரின் நடிப்பை பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.