மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான கூடாரவிளை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் படையப்பா எனும் ஆண் காட்டு யானை ரேசன் கடையை சேதப்படுத்திய நிலையில் வனத்துறையினர் விரட்டியதால், தனது எண்ணம் நிறைவேறாமல் ஏமாற்றம் அடைந்தது.
மூணாறு அருகே குட்டியாறுவாலி பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு டூவீலர், ஜீப் ஆகியவற்றை சேதப்படுத்திய படையப்பா நேற்று முன்தினம் இரவு கூடாரவிளை எஸ்டேட் பாக்டரி டிவிஷன் பகுதிக்குச் சென்றது. அங்கு நள்ளிரவு 2:15 மணிக்கு வேலுச்சாமி நடத்தி வரும் ரேசன் கடையின் கதவை உடைத்து அரிசி மூடைகளை வெளியில் இழுக்க முயன்றது. அப்போது தகவல் அறிந்து வந்த வனத்துறை சார்பிலான காட்டுயானைகளை கட்டுப்படுத்தும் குழு யானையை விரட்டினர். 30 கிலோ அரிசி மட்டும் நாசமான நிலையில் பொருட்கள் தப்பின. ரேசன் கடையை சேதப்படுத்தியும் வனத்துறையினரின் நடவடிக்கையால் தனது எண்ணம் நிறைவேறாமல் ஏமாற்றம் அடைந்தது.
மீண்டும் வந்தது:
அதே பகுதிக்கு நேற்று அதிகாலை 5:30 மணிக்கு மீண்டும் வந்த யானை தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் ஒரு மணி நேரம் சுற்றித்திரிந்தது. அதனால் தொழிலாளர்கள் வீட்டை விட்டு வெளியில் வர இயலாததால் காலை வேளையில் நடக்கும் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. காலை 6:30 மணிக்கு குடியிருப்பு பகுதியை விட்டு வெளியேறிய பிறகு தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர். ……….
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement