ஒவ்வொருவருடைய அதிகபட்ச கனவும் சொந்தமாக வீடு, கார் என வசதியாக வாழ வேண்டும். பிடித்த இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும். இவை எல்லாவற்றையும் அடைய வேண்டுமெனில் அதற்கு போதுமான நிதி ஆதாரம் மிகவும் அவசியம்.
ஆனால், மாத சம்பளம் வாங்கி மட்டுமே இதையெல்லாம் அடைந்துவிட முடியாது. அதற்குச் சில கூடுதல் வருமான ஆதாரங்களையும் நாம் வைத்திருக்க வேண்டும். பெரும்பாலும் சொந்தமாகத் தொழில் செய்பவர்கள், ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் உயரதிகாரிகள் போன்றவர்களுக்குத்தான் சாத்தியம். சாதாரண நடுத்தர வருமானம் பார்ப்பவர்களும் இப்படியான கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமெனில் அதற்கு ஒரே வழி செலவழிப்பதற்கு முன் சேமிப்பதுதான்.

சேமிப்பது மட்டுமல்ல, சேமித்த பணத்தை முதலீடும் செய்ய வேண்டும். இன்று பணவீக்கம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை செய்திகளில் தொடர்ச்சியாகப் பார்க்கிறோம். போக போக இன்னும் பணவீக்கம் உயருமே தவிர குறையாது. அப்படியிருக்க பணவீக்கத்தைத் தாண்டி வருமானம் ஈட்ட வேண்டியது அவசியம். அதற்குப் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் சிறந்த வழி என்று அனைத்து நிதி நிபுணர்களுமே கூறுவது உண்டு.
ஆனால் நேரடியாக பங்குகளில் முதலீடு செய்ய முடியாதவர்கள் என்ன செய்யலாம்? அவர்களுக்காக உருவானதுதான் மியூச்சுவல் ஃபண்ட். மியூச்சுவல் ஃபண்டுகளிலும் பங்குச் சந்தையின் பலனை நம்மால் பெற முடியும்.
நீண்டகாலத்தில் நம்முடைய நிதி இலக்குகளை எட்டுவதற்கு மியூச்சுவல் ஃபண்டுகள் பெரிதும் உதவியாக இருந்துவருகின்றன. ஒவ்வொருவருடைய நிதி எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சரியான ஃபண்டுகளில் முதலீடுகளைப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். அதைச் சொல்லி தருவதற்குதான் நாணயம் விகடன் தொடர்ச்சியாக முதலீட்டாளர்கள் கூட்டங்களை நடத்துகிறது.

வரும் ஜனவரி 8-ம் தேதி சென்னையில் அப்படியான மியூச்சுவல் ஃபண்ட் கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறது. நாணயம் விகடன் மற்றும் குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘நீண்ட கால நிதி இலக்குகளுக்கான வழிமுறை – சரியான சொத்து ஒதுக்கீடு’ என்ற இந்த நிகழ்ச்சியானது சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலை அமிர்தவல்லி ஹாலில் ஜனவரி 8-ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஐ.வி சுப்ரமணியம் சிறப்புரையாற்றுகிறார். அனுமதி இலவசம். அனைவரும் வருக. பதிவு செய்ய: https://bit.ly/3Yhv1lq