வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலமாக மக்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை சிமென்ட் குடோனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல் அணைக்கட்டு விரிஞ்சிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வீடுகளில் சேகரிக்கும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், தரம்பிரிக்கப்படாமல், நேரடியாக விரிஞ்சிபுரம் பாலாற்றில் கொட்டி குவித்து வருகின்றனர். தற்போது, பாலாற்றில் மழைவெள்ளம், பாய்ந்தோடும் நிலையில், பாலாற்றங்கரையில் தெர்மாகோல், பிளாஸ்டிக், இறைச்சி கழிவுகள்,குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை சரியான முறையில் பயன்படுத்தி, நிலத்தடி நீர் மாசடைவதை தடுக்க வேண்டும். விரிஞ்சிபுரம் ஊராட்சியில் சேகரிக்கும் குப்பைகள் பாலாற்றங்கரையில் கொட்டுவதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, ேபரூராட்சி, ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்ைம திட்டம் 100 சதவீதம் இயங்குகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
