14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோவில் வழக்கில் இளைஞர் கைது


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பரத்(20) என்ற இளைஞர் 14 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.

சிறுமியுடன் கட்டாய திருமணம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மோரூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பரத்(20), அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

பரத் அம்மாபேட்டை அடுத்த பூதப்பாடி-யில் உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில்,   கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோவில் வழக்கில் இளைஞர் கைது | Tamil Nadu Namakkal Youth Arrested Under Pocso Act

மேலும் மேட்டூர் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த சிறுமியுடன் பரத் என்ற இளைஞர் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

பெற்றோர் புகார்

இந்நிலையில் மகளை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் அம்மாபேட்டை பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், சிறுமியை மீட்டதுடன்,  பரத் என்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஈரோடு மகிளா கோர்ட் நீதிபதி மாலதி, பரத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் தீர்ப்பு வழங்கியுள்ளார். 

14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோவில் வழக்கில் இளைஞர் கைது | Tamil Nadu Namakkal Youth Arrested Under Pocso Act



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.