200 பில்லியன் டொலர்களை இழந்த எலோன் மஸ்க்! மனித வரலாற்றில் முதல் நபர்


மனித வரலாற்றில் 200 பில்லியன் டொலர்களை தங்கள் நிகர மதிப்பில் இருந்து இழந்த ஒரே நபர் எலோன் மஸ்க் ஆவார்.

ஜனவரி 2021-ல், அமேசானின் ஜெஃப் பெசோஸுக்குப் பிறகு, மஸ்க் 200 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான “தனிப்பட்ட செல்வத்தை” கொண்ட இரண்டாவது நபராக எலான் மஸ்க் இருந்தார்.

எலான் மஸ்கின் செல்வம் குறைவதற்கு என்ன காரணம்?

சமீபத்திய வாரங்களில் டெஸ்லா பங்குகள் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 137 பில்லியன் அமெரிக்க டொலராக சரிந்தது. டிசம்பர் 27 அன்று டெஸ்லா பங்குகளில் 11 சதவீத வீழ்ச்சியும் இதில் அடங்கும்.

200 பில்லியன் டொலர்களை இழந்த எலோன் மஸ்க்! மனித வரலாற்றில் முதல் நபர் | Elon Musk Lose 200 Billion Usd In Human HistoryReuters

டெஸ்லா இப்போது அமெரிக்காவில் உள்ள நுகர்வோருக்கு ஆண்டு இறுதிக்குள் அதன் இரண்டு அதிக அளவு மாடல்களுக்கு 7,500 அமெரிக்க டொலர் தள்ளுபடியை வழங்குகிறது. மேலும், ஷாங்காய் ஆலையில் உற்பத்தியை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நவம்பர் 2021-ல் மஸ்கின் சொத்து மதிப்பு 340 பில்லியன் டொலராக இருந்தது. இதைத் தொடர்ந்து, ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து அவர் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார்.

ஆனால் இந்த மாதம், பிரெஞ்சு வணிக அதிபரும், LVMH-ன் ஆடம்பரப் பொருட்களின் இணை நிறுவனருமான பெர்னார்ட் அர்னால்ட் மஸ்க்கை முந்தினார்.

ட்விட்டர் விளைவு

அக்டோபர் மாத இறுதியில் மஸ்க் சமூக ஊடக தளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கினார். அதற்கான செலவை சற்று ஈடுகட்ட, மஸ்க் டெஸ்லாவில் தனது குறிப்பிடத்தக்க பங்குகளை விற்றார். இதன் விளைவாக எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இனி அவரது மிகப்பெரிய சொத்தாக இருக்காது.

மஸ்கின் செல்வம் வீழ்ச்சியடைந்து, வட்டி விகிதங்கள் உயர்ந்தது

பல தசாப்தங்களில் மிக வேகமாக வட்டி விகிதங்களை உயர்த்தியதற்காக பெடரல் ரிசர்வ் மீது எலோன் மஸ்க் பலமுறை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“டெஸ்லா முன்னெப்போதையும் விட சிறப்பாக செயல்படுகிறது!” என மஸ்க் டிசம்பர் 16 அன்று ட்விட்டரில் எழுதினார். ஆனால், பெடரல் ரிசர்வ் உயர்த்திய வட்டி விகிதம் தான் தங்களுக்கு உண்மையான பிரச்சினை என கூறினார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.