Happy New Year 2023: முதல் நாடாக புத்தாண்டை முத்தமிட்ட நியூசிலாந்து..!

சர்வதேச அளவில் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2023 ஆம் பிறந்துள்ளது.

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2023 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இதை அடுத்து, மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாகப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்.

உலகிலேயே முதலாவதாகப் புத்தாண்டு கொண்டாடப்படுவது நியூசிலாந்து நாட்டில் தான். இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் சுமார் ஏழரை மணி நேரம். அதன்படி, இந்திய நேரப்படி சரியாக 4:30 மணியளவில், நியூசிலாந்து நாட்டில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி 12 மணி பிறந்து விட்டது.

புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் ஆக்லாந்து நகரின் ஸ்கை டவரில் வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன. மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்ததை அடுத்து தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகளும் நடந்தன.

உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்காது; சீன அதிபர் புடினுக்கு விளக்கம்.!

உலகின் நேரக் கணக்கின்படி பசிபிங் தீவில் உள்ள டோங்கா, சமோவா, கிரிபாட்டி, கிறிஸ்துமஸ் தீவுகளில் புத்தாண்டு பிறக்கும். ஆனால், நியூசிலாந்தில் தான் முதல் புத்தாண்டு பிறப்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிற்கு அருகில் மக்கள் வசிக்காத தீவுகளான பேக்கர் தீவு மற்றும் ஹவ்லேண்ட் ஆகியவை, புத்தாண்டை கடைசியாக வரவேற்கும் இடங்கள் ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.