Zomato மூலம் கடந்த ஆண்டு 28 லட்சத்திற்கு உணவு ஆர்டர் செய்த நபர்!

இந்த ஆண்டு முடிவடையும் நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களான Zomato மற்றும் Swiggy ஆகிய நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டு அதிகப்படியான உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். அதில் டெல்லி நகரை சேர்ந்த நபர் ஒருவர் 3000 உணவு ஆர்டர்களை Zomato மூலமாக செய்துள்ளார்.

அதில் ஒரு நாளைக்கு 9 ஆர்டர்கள் விகிதம் இந்த வருடம் முழுவதும் செய்துள்ளார். இந்த வருடம் அதிகபட்சமாக புனேவை சேர்ந்த ஒருவர் 28 லட்சம் ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்துள்ளதாக Zomato தெரிவித்துள்ளது.

ஒருவர் தனியாக ஒரு ஆர்டரில் 25 ஆயிரம் ரூபாய்க்கு உணவு வாங்கியுள்ளார். இதேபோல இருக்கும் பலரது விவரங்களை Zomato வெளியிட்டுள்ளது. அந்த டெல்லியை சேர்ந்த நபர் ஆர்டர் செய்த 3000 உணவுகளில் சுமார் 1,098 கேக் ஆர்டர் மட்டுமே ஆகும். மேலும் ஆன்லைன் உணவு ஆர்டர் செய்ததன் மூலமாக சுமார் 6.96 லட்சம் ரூபாய் தள்ளுபடியும் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு நிமிடமும் 186 பிரியாணி Zomato 2022 ஆம் ஆண்டு டெலிவெரி செய்துள்ளது. Swiggy நிறுவனமும் 2022 ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் பிரியாணி அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பிரியாணியை தொடர்ந்து மசாலா தோசை, சிக்கன் ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜிடேரியன் பிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன் போன்றவை அதிகப்படியாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி சமயத்தில் ஸ்விக்கி மூலம் ஒருவர் 75,378ஆயிரம் ரூபாய் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். மேலும் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் பலவகையான உணவுகளை கடந்த வருடம் புதிதாக ஆராய்ச்சி செய்து ருசித்து பார்த்துள்ளார்கள். அதில் கொரியன், இத்தாலியன், மெக்சிகன், ஜாப்பனீஸ் சுஷி போன்ற உணவுகள் பல உள்ளன. இந்த ஆண்டு ஆன்லைன் உணவு டெலிவரி அமோகமாக இருந்துள்ளது. இது மேலும் வளர்ச்சி பெரும் என்று உணவு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.