மெக்சிகோ சிட்டி,-வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் சுற்றுலா பஸ் சாலையோரம் கவிழ்ந்ததில், குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகினர்;47 பேர் படுகாயம் அடைந்தனர்.
மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள லியோன் நகரத்தைச் சேர்ந்த மக்கள், வார விடுமுறையைக் கொண்டாட சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் லியோன் நகரிலிருந்து சென்ற ஒரு சுற்றுலா பஸ், நயாரித் என்ற பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் பஸ்சில் இருந்த நான்கு குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகினர்.
காயமடைந்த 47 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடகைக்கு எடுக்கப்படும் சுற்றுலா பஸ்கள்முறையாக பராமரிக்கப்படாததால், இது போன்ற விபத்துகள் அப்பகுதியில் தொடர்ந்து நிகழ்வதாக போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement