இலங்கையில் புதிதாக வாகனங்களை பதிவு செய்யும் போதும் உரிமை மாற்றத்தின் இன்று முதல் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது மாகாண எழுத்துகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க
தெரிவித்துள்ளார்.
புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் உரிமை மாற்றம் செய்யப்படும்
போது மாகாண எழுத்துகள் காரணமாக வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அடிக்கடி
மாற்றம் செய்ய நேரிடுகிறது.
இந்த சிக்கல்களை தவிர்க்க வாகன இலக்கத்தகடுகளிலுள்ள
மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வாகன உரிமையாளர்கள் மற்றும் போக்குவரத்து திணைக்களத்திற்கு இது தொடர்பில்
ஏற்படும் சிரமங்கள் மற்றும் சிக்கல்களை இலகுபடுத்தும் வகையில் இத்தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.