இலவச ரேஷன் திட்டம்: கொரோனா காலத்தில் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உதவும் வகையில் ‘இலவச ரேஷன் திட்டத்தை’ மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், கொரோனா கலாம் முதல் இன்று வரை அரசு ஏழை மக்களுக்கு இலவச கோதுமை மற்றும் அரிசியை வழங்கி வருகிறது. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனா திட்டத்தின் கீழ் 5 கிலோ இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. ஏப்ரல் 2020 இல் மத்திய அரசால் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) கடந்த 31 டிசம்பர் 2022 அன்றுடன் முடிவடைகிறது எனத் தகவல்கள் வெளியானது, ஆனால் தற்போது புத்தாண்டு முதல், 81.35 கோடி பேருக்கு, மேலும் ஓராண்டுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுவும் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த செய்தி ஏழை ரேஷன் கார்டுதாரர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அரசுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி செலவாகும்
ஜனவரி 1 முதல், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், 81.35 கோடி மக்கள் டிசம்பர் 2023 வரை இலவச ரேஷன் பலனைப் பெறுவார்கள். ஜனவரி 1 முதல் டிசம்பர் 31, 2023 வரை அனைத்து NFSA பயனாளிகளுக்கும் வழங்கப்படும் ரேஷனுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்காக மத்திய அரசு சுமார் ரூ.2 லட்சம் கோடி செலவிட உள்ளது.
மத்திய அரசின் இலவச ரேசன் திட்டம் தொடரும்
மத்திய அரசின் புதிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஜனவரி 1, 2023 முதல் தொடங்கும் என்று மத்திய உணவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2023 வரை 81.35 கோடி பேருக்கு இலவச கோதுமை அரிசி வழங்கப்படும். இதனுடன், இந்த திட்டம் NFSA இன் பயனுள்ள மற்றும் சீரான செயல்பாட்டை உறுதி செய்யும் என்று மத்திய அரசாங்கம் அறிக்கையில் கூறியுள்ளது.
35 கிலோ உணவு தானியங்களும் இலவசம்
2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் இந்த திட்டத்தின் கீழ் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்கள் மற்றும் முன்னுரிமை குடும்பங்கள் (PHH) அரிசி அட்டை வைத்துள்ளவர்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். முன்னுரிமை குடும்பங்களுக்கு (PHH) 5 கிலோவும், அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்களுக்கு 35 கிலோ உணவு தானியங்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
1 ரூபாய் கூட கொடுக்க தேவையில்லை
முன்னதாக மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் ரேஷனுக்கு 1 முதல் 3 ரூபாய் வரை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். அதே நேரத்தில், ஏப்ரல் 2020 இல் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் வழங்கப்பட்டது. தற்போது மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு 1 ரூபாய் கூட செலுத்த தேவையில்லை.
இந்த திட்டத்தின் கீழ் யார் பலன்களைப் பெறுவார்கள்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், 81.35 கோடி ஏழைகள் இந்தாண்டு முழுவதும் இலவச உணவு தானியங்கள் பெறலாம் என்று மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 30) அறிவித்து. ஆனால் உங்களிடம் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அரசின் இத்திட்டத்தின் பலனை நீங்கள் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் உள்ள ஏழை மக்கள் மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியங்களைப் பெறுவார்கள்.
உணவு தானியங்களின் பணவீக்கம் அதிகரிப்பு
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு 5 கிலோ ரேஷன் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் வழக்கமான ரேஷன் அளவை விட இருமடங்கு உணவு தானியங்களை இலவசமாக பெறலாம். இந்த திட்டம் ஏப்ரல் 2020 இல் முதல் கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் மார்ச் 2022 முதல் ஆறு மாதங்களுக்கு செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 31ம் தேதி வரை இலவச ரேஷன் வழங்க அரசு உத்தரவிட்டப்பட்டது. அதன்பின்னர் இந்தத்திட்டம் நிறுத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகின. ஏனென்றால், உணவு தானியங்களின் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அதேபோல நிதி ஆயோக் (NITI Aayog) அதிகாரி ரமேஷ் சந்த், “பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் போது PMGKAY போன்ற திட்டத்தை தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.