“ஒய்வெடுக்க யாரும் நேரம் கொடுப்பதில்லை” ரிஷப் பண்ட் குடும்பத்தினர் குற்றச்சாட்டு


கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்டிற்கு யாரும் ஓய்வெடுக்க நேரம் கொடுப்பதில்லை என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்

கடந்த டிசம்பர் 30, 2022 அன்று இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து ரூர்க்கி நோக்கி செல்லும் போது பயங்கர கார் விபத்தில் சிக்கினார்.

அவர் ஓட்டி சென்ற Mercedes-AMG கார் டிவைடரில் மோதி அதிவேகமாக சாலையில் சறுக்கிச் சென்று விபத்துக்குள்ளானதில் கார் தீப்பிடித்து எரிந்தது.

“ஒய்வெடுக்க யாரும் நேரம் கொடுப்பதில்லை” ரிஷப் பண்ட் குடும்பத்தினர் குற்றச்சாட்டு | Rishabh Pant Dont Get Rest Time Parents Report

காரின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்த ரிஷப் பண்ட் மோசமான காயங்களுடன் உயிர் தப்பினார்.

அவர் தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குடும்பத்தினர் குற்றச்சாட்டு

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட்-டை பார்க்க பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வருவதாலும், அவரிடம் பேசுவதாலும் அது ரிஷப்பின் குணமடையும் ஆற்றலை குறைக்க நேரிடும் என மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பண்டிற்கு ஓய்வெடுக்க நேரம் யாரும் கொடுப்பதில்லை என்று ரிஷப் பண்ட் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.  

“ஒய்வெடுக்க யாரும் நேரம் கொடுப்பதில்லை” ரிஷப் பண்ட் குடும்பத்தினர் குற்றச்சாட்டு | Rishabh Pant Dont Get Rest Time Parents Report



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.