மஹபூபாபாத் : தெலுங்கானாவில் லாரியில் இருந்த ‘கிரானைட்’ கற்கள், ஆட்டோ மீது விழுந்ததில், அதில் பயணம் செய்த மூன்று பேர் பலியாகினர்.
தெலுங்கானா மாநிலத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, முகோரிகுடம் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் நேற்று ஆட்டோவில் பயணித்தனர். மஹபூபாபாத் மாவட்டம் குரவி கிராமம் அருகே ஆட்டோ சென்ற போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்த பிரமாண்ட கிரானைட் கற்கள், ஆட்டோ மீது சரிந்து விழுந்தன.
இந்த கோர விபத்தில், ஆட்டோ டிரைவர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் ஐந்து பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.லாரியில் கிரானைட் கற்கள் ஏற்றிய போது, அது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement