வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: குஜராத் கடல்பகுதியில் இந்திய கடல்எல்லைக்குள் அத்துமீறிய 79 படகுகளில் வந்த பாகிஸ்தானை சேர்ந்த 22 மீனவர்கள் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். குஜராத் மாநிலம் புட்ச் கடல்பகுதியில் கடலேரா காவல்படையினர் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது 79 மீன்பிடி படகுகள் இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைவதை கண்டு அப்படகுகளை சுற்றி வளைத்தனர்.
![]() |
படகுகளை சோதனை செய்ததில் அதில் 22 பேர் இருந்தனர். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த மீனவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் வந்த படகுகளில் ஹெ ராயின் போதை பொருள் மற்றும் சில புகையிலை பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்த கடலோர காவல்படையினர் எல்லை பாதுகாப்புடை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement