கோயிலை சுற்றி மது அருந்தும் கும்பல்… தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

சேலத்தை சேர்ந்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், “சேலம் மாவட்டம் வளையகாரனூர் இருட்டுக்கல் முனியப்பன் கோவிலை சுற்றியும் மது அருந்துபவர்கள் காலிபாட்டில்களை வீசி செல்வதாகவும், வனப்பகுதியில் மரக்கிளைகள் வெட்டப்பட்டு எரியூட்டப்படுவதாகவும், அந்த வழியாக செல்லும் பெண்களிடம் மதுபோதையில் இருப்பவர்கள் தகராறில் ஈடுபடுவதாகாவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, வனப்பகுதியை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு வழிபாட்டு முறை உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், பெண்களுக்கு தொல்லை அளிக்கப்படும் குற்றச்சாட்டுகளை மனுவில் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என தெரிவித்ததுடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சுற்றுலா தலங்கள், மலைவாச ஸ்தலங்களுக்கு வரும் மதுபிரியர்கள் அங்குள்ள வனப்பகுதிகளில் மது அகுந்தி விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவி்ட்டு செல்வதால், அவை அந்த வழியாக செல்லும் வனவிலங்குகளின் கால்களில் குத்தி அவற்றின் உடலுக்கு ஊறுவிளைக்கும்படி அமைந்து வருகிறது.

இதனை தடுக்கும் பொருட்டு சுற்றுலா தலங்களில் உள்ள அரசு மதுபான கடைகளில் மது வகைகளை வாங்கும் மதுபிரியர்களிடம் பாட்டிலுக்காக கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கவும், இந்த தொகையை அவர்கள் பாட்டிலை மீ்ண்டும் கடையில் திரும்ப ஒப்படைத்த பின்பு திரும்ப தர வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது. அத்துடன் இந்த நடைமுறையை டாஸ்மாக் நிர்வாகம் ஏன் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த கூடாது என்றும் நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் கேளவி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.