சீன பயணிகள் நுழைய அதிரடி தடை விதித்த முதல் நாடு!


கோவிட் தொற்று காரணமாக சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் தங்கள் நாட்டில் நுழைய மொராக்கோ அரசு தடை விதித்துள்ளது.

சீனாவில் மீண்டும் கோவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அந்நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கோவிட் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளன.

மொராக்கோ தடை உத்தரவு

இந்த நிலையில் வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோ தங்கள் நாட்டில் சீன பயணிகள் நுழைய அதிரடி தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக மொராக்கோவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

‘சீனாவில் கோவிட் தொற்று தொடர்பான சுகாதார நிலைமை மோசமடைந்துள்ள சூழலில், மொராக்கோவில் ஒரு புதிய கோவிட் அலை மற்றும் அதன் அனைத்து விளைவுகளையும் தவிர்ப்பதற்காக சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும், மொராக்கோ எல்லைக்குள் நுழைவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீன பயணிகள் நுழைய அதிரடி தடை விதித்த முதல் நாடு! | Morocco First Country Ban China Arrivals

@Reuters file photo

இந்த நடவடிக்கை இரு நாட்டு மக்களுக்கு இடையேயான நேர்மையான நட்பையோ அல்லது இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையையோ பாதிக்காது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன பயணிகள் நுழைய அதிரடி தடை விதித்த முதல் நாடு! | Morocco First Country Ban China Arrivals

@ REUTERS/Tingshu Wang

இதேபோல் அவுஸ்திரேலியா, கனடா நாடுகள் சீன பயணிகளுக்கு கோவிட் பரிசோதனை தொடர்பான கட்டுப்பாட்டை விதித்துள்ளன.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.