நடுக்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் தத்தளித்த 12 பேர் பத்திரமாக மீட்பு| 12 people rescued after sinking cargo ship in mid-sea

ஆமதாபாத் : குஜராத் அருகே அரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்த 12 பேரை இந்திய கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

நம் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல்அரபிக் கடல் வழியாக ஆப்ரிக்க நாடான ஜிபோட்டிக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது.

குஜராத் அருகே நடுக்கடலில் சென்றபோது கடல் கொந்தளிப்பு காரணமாக கப்பல் தண்ணீரில் மூழ்கத் துவங்கியது. உடனடியாக இது குறித்து மும்பையில் உள்ள இந்திய கடலோர காவல்படை மீட்பு மையத்துக்கு தகவல் தரப்பட்டது.

இதையடுத்து இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல்கள் மீட்புப் பணிக்கு விரைந்தன. கடுமையான முயற்சிக்குப் பின் விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்த 12 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். முதல்கட்ட மருத்துவ உதவிக்குப் பின் அவர்களிடம் விபத்து குறித்து கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.