பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: எதிர்த்த 58 மனுக்கள் தள்ளுபடி| Demonetization moves: Supreme Court verdict; Dismissal of 58 opposing petitions

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பணமதிப்பிழப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு 2016 நவ -8ல் அறிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள கள்ளப்பணப்புழக்கத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

latest tamil news

இந்த அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 58 மனுக்கள் பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான நீண்டகால விசாரணைக்கு பின்னர் இன்று தீர்ப்பளித்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

5 பேர்களை அரசியல் சாசன பெஞ்சில் அப்துல் நசீர் தலைமையில் பி.ஆர்.கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்ரமணியன், மற்றும் பி.வி. நாகரத்னா ஆகிய நீதிபதிகள் இடம்பெற்றிருந்தனர்.

நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு விவரம் வருமாறு;

latest tamil news

விதிமுறை மீறலும் இல்லை

மத்தியஅரசு ரிசர்வ் வங்கி இடையில் 6 மாத காலமாக நடந்த ஆலோசனைப்படியே இந்த பணமதிப்பிழப்பு நடந்துள்ளது. எந்தவொரு விதிமுறை மீறலும் இல்லை. அரசு எடுக்கும் நடவடிக்கையை கட்டுப்படுத்த கோர்ட் விரும்பவில்லை,

மத்திய அரசின் பொருளாதார கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை. அரசின் பணமதிப்பிழப்பு செல்லும். இவ்வாறு பெரும்பாண்மையான நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர் .

5 ல் 4 நீதிபதிகள் மத்திய அரசின் அறிவிப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

நாகரத்னா என்ற நீதிபதி ; ஆர்பிஐ விதி முறைப்படி இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாற்று கருத்து கொண்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.