பழனியில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் போராட்டம்; பக்தர்கள் அவதி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகின்றனர்‌‌. இவ்வாறு வரும் பக்தர்கள் முருகனுக்கு முடிக்காணிக்கை செய்வது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக பழனி அடிவாரம், சரவணப்பொய்கை, சண்முகநதி, தேவர் சிலை உள்பட 8இடங்களில் முடிக்காணிக்கை செலுத்துவதற்காக மண்டபங்கள் செயல்படுகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட மொட்டை அடிக்கும் தொழகலிளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக 5 ஆயிரம் ரூபாயும்,  கூடுதலாக ஒரு மொட்டைக்கு 30ரூபாய் வீதம் மாதம் சராசரியாக 13ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இது திருவிழா காலங்களில் இன்னும் கூடுதலாக ஊதியம் கிடைக்கும் என்று கோவில் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பழனியில் உள்ள மொட்டை அடிக்கும் நிலையங்களில்   பணிபுரியும் 308க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முடிக்காணிக்கை செலுத்துவதற்காக மொட்டை அடிக்க வந்த பக்தர்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:-  முடி எடுக்கும் தொழிலாளர்களை பழனி கோவில் நிர்வாகம் வழங்கும் ஊதியம் போதவில்லை, சிறுசிறு தவறு நடந்தால் கூட பணியிடை நீக்கம் செய்வதால் தங்கள் குடும்பம் பாதிக்கப்படுவதாகவும், கண்காணிப்பாளர் வருகையின்போது பணியில் இல்லாத ஊழியர்களுக்கு வருகைப் பதிவேட்டில் வரவில்லை என எடுத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர். இன்று முடிக்கொட்டைகை கண்காணிப்பாளர் அர்ஜுனன் வருகை பதிவேட்டை பார்த்துவிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு பணிக்கு வராத ஊழியர்களின் வருகையை ரத்து செய்ய அறிவுறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த மொட்டை அடிக்கும் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.  

இதுதொடர்பாக பழனி கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது :- மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் பெரும்பாலும் கையெழுத்து போட்டுவிட்டு வெளிவேலைகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் பணிக்கு வராத தொழிலாளர்களுக்கும் சம்பளம் வழங்கும் நிலை ஏறுபடுகிறது. சரிசரியாக மாதம் ஒன்றுக்கு நாற்பது லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், அடுத்து கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு பணிக்கு வராமல் இருக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதை செய்யக்கூடாது என தொழிலாளர்கள் தெரிவிப்பதகாவும், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பர் கோவிலில் பக்தர்களுக்கு மொட்டை அடிக்க செல்லுமாறு பணியாளர்களிடம்  தெரிவித்தால், அங்கு யாரும் செல்வதில்லை என்றும் தெரிவித்தனர். பழனி திருக்கோவில் நிர்வாகத்திற்கும் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் பொழுது மொட்டை அடிக்க வந்த பக்தர்கள் அதிருப்தி அடைந்து அருகில் உள்ள தனியார் கடைகளில் மொட்டை அடிக்க செல்வதாக கூறி சென்று விட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.