பாஜகவிற்கு அக்னி பரீட்சை… 2024-ல் தீர்ப்பு எழுத ரெடியாகும் 9 மாநிலங்கள்!

இந்தியா சந்திக்கப் போகும் அடுத்த பெரிய தேர்தல் 2024 மக்களவை தேர்தல். இதற்கான முன்னோட்டமாக நடப்பாண்டில் 9 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. கிட்டதட்ட அரையிறுதி போட்டி என்று கூட சொல்லலாம். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அசுர பலத்துடன் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

அசுர பலத்தில் பாஜகபணமதிப்பிழப்பு முதல் பொது சிவில் சட்டம் வரை மத்திய அரசின் செயல்பாடுகள் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் அக்கட்சியை எதிர்க்க வலுவான கூட்டணி இருக்கிறதா? என்று கேட்டால் யாராலும் பதில் சொல்ல முடியாது. அனைத்து கட்சிகளும் சிதறுண்டு கிடக்கின்றன.
9 மாநில சட்டமன்ற தேர்தல்காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், பாரதிய ராஷ்டிர சமிதி, ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி என பலரும் மாற்று அணியை முன்னெடுக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இப்படி அணிகள் பிளவுபடுவது பாஜகவிற்கு தான் சாதகமாக முடியும். எனவே எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு செல்லும்… உச்ச நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பின் முழு விவரம்!குறிப்பாக மாநில அளவில் தங்களை வலுப்படுத்தி கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்கு நடப்பாண்டு மிக முக்கியமான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதுதான் 9 மாநில சட்டமன்ற தேர்தல்.
வடகிழக்கு மாநிலங்கள்பிப்ரவரி – மார்ச் 2023ல் வடகிழக்கில் உள்ள மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. நவம்பர் 2023ல் மிசோரம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதில் திரிபுராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. நாகாலாந்து, மேகாலயா ஆகியவற்றில் பிராந்திய கட்சிகளுடன் இணைந்து ஆளும் அரசில் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக உள்ளது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி செய்து வருகிறது.
மத்தியப் பிரதேசம்நவம்பர் – டிசம்பர் 2023ல் மத்திய பிரதேசம் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. இங்கு ஆளுங்கட்சியாக பாஜக இருக்கிறது. இந்த மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்து பாஜக ஆட்சியை பிடித்திருந்தது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜக பக்கம் தாவி விட்டனர். இதனால் இம்முறை பெரும் எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்கிறது.
சட்டீஸ்கர் & ராஜஸ்தான்சட்டீஸ்கரில் நவம்பர் 2023, ராஜஸ்தானில் டிசம்பர் 2023ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் இருக்கிறது. மத்தியில் ஆட்சி அமைக்கும் கனவில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அதேசமயம் பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து தேர்தலில் களம் காண காத்திருக்கிறது. குறிப்பாக ராஜஸ்தானில் அசோக் கெலாட் – சச்சின் பைலட் இடையிலான உட்கட்சி பூசலை தனக்கு சாதகமாக மாற்ற பாஜக திட்டமிட்டு கொண்டிருக்கிறது.
தெலங்கானாடிசம்பர் 2023ல் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இம்மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசிய அரசியலில் கால் பதிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தான் தனது கட்சியின் பெயரை மாற்றி கவனம் ஈர்த்தார் சந்திரசேகர் ராவ்.
வணிக கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம்; மத்திய அரசின் புத்தாண்டு பரிசு.!
எனவே சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் என இரண்டிலும் வாகை சூட தீவிரம் காட்டி வருகிறார். இங்கு பாஜக, காங்கிரஸின் எழுச்சியை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கர்நாடகாமே 2023ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தென்னிந்தியாவில் பாஜக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா. இதை வைத்து மற்ற மாநிலங்களையும் பிடிக்க திட்டமிட்டு வருகிறது. எனவே கர்நாடகாவை தக்க வைப்பது பாஜகவிற்கு கவுரவப் பிரச்சினையாக இருக்கும்.
இங்கு காங்கிரஸ், மதச்சார்பற்ற காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்து பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தது. இம்முறை பாஜகவின் வியூகம் பலிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல்ஒட்டுமொத்தமாக 9 மாநில சட்டமன்ற தேர்தல்கள் தேசிய அளவில் மிகுந்த கவனம் பெற்றுள்ளன. இதுதவிர ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் தேர்தல் வர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.