மதுரை மாவட்டத்தில் புத்தாண்டு நண்பர்களுடன் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் பாண்டியன் (19). இவர் திக் ஊரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரி நண்பரான சுதாகர் என்பவருடன், மதுரை உள்ள பூமங்களப்பட்டி பகுதியை சேர்ந்த மகேஸ்வரனை பார்ப்பதற்காக நேற்று சென்றுள்ளனர்.
பின்பு இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து காரியந்தல்பட்டியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குளித்துள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக கார்த்திக் பாண்டியன் நீரில் மூழ்கியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கொட்டாம்பட்டி தீயணைப்பு துறையினர் கிணற்றில் மூழ்கிய கார்த்திகை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தண்ணீரை மோட்டர் மூலம் வெளியேற்றியும், மேலூர் தீயணைப்பு துறையினர் உதவியுடனும் கார்த்திக் பாண்டியன் உடலை இரவு வரை தேடி சுமார் 8 மணி நேரத்திற்கு பின்பு உடலை கைப்பற்றினர்.
இதையடுத்து உயிரிழந்த கார்த்திக் பாண்டியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.