புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இரண்டு நாட்களில், டாஸ்மார்க் மதுபான கடையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்திருக்கலாம் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருடம் புத்தாண்டு வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று வந்ததால், கூடுதலாக மது விற்பனை நடந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 31ஆம் தேதி முதலே டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் குவிய தொடங்கினர். குறிப்பாக சனிக்கிழமை மாலை டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைகடலென மோதியது.
குடிமகன்களுக்கு ஏற்ப டாஸ்மார்க் கடைகளில் அனைத்து வகையான மதுபானங்களும் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 5300 டாஸ்மாக் கடைகளிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் மது விற்பனை நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
கிட்டதட்ட டிசம்பர் 31ம் தேதி, ஜனவரி 1ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் சேர்த்து சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மதி விற்பனை ஆகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இதில் டிசம்பர் 31ம் தேதி மட்டும் 610 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.