மதுரையின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தும் ஆங்கில புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
முதன் முறையாக மதுரையில் கோரிபாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலை அருகே புத்தாண்டை மக்களுடன் சேர்ந்து மதுரை போலீசாரும் செலிபிரேட் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், மதுரை மாவட்ட பகுதியில் உள்ள கோரிப்பாளையத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி செலிபரேட் செய்யும் வகையில் இளைஞர்கள் பைக் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்த பந்தயத்தில் மதுரையைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களுடன் போலீஸாரும் சேர்ந்து புத்தாண்டைக் கொண்டாடினர்.