கடலூரில் மது போதையில் பாம்பை பிடித்து புத்தாண்டு பரிசு கொடுத்தவர் அதே பாம்பு கடித்து உயிரிழந்தார்.
திருப்பாதிரிப்புலியூர் சுப்பராயன் நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் புத்தாண்டை முன்னிட்டு மதுபோதையில் அப்பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்.
அப்போது புத்தாண்டு பிறந்த நேரத்தில் அந்தப் பகுதி வழியாக பாம்பு ஒன்று செல்வதை பார்த்த மணிகண்டன் மதுபோதையில் ஆர்வத்துடன் அந்த பாம்பைப் பிடித்துள்ளார்.
அப்போது அந்தப் பாம்பு அவரை கடித்த நிலையிலும் அங்கிருந்தவர்களிடம் அந்தப் பாம்பை காட்டி இது உங்களுக்கு புத்தாண்டு பரிசு என கூறியவாறு மயங்கி விழுந்துள்ளார்.
இதனை அடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
அந்த பாம்பினை மருத்துவமனையில் இருந்தவர்கள் அடித்து கொன்று விட்ட நிலையில் அது கொடூரமான விஷம் கொண்ட கண்ணாடிவிரியன் பாம்பு என்பது தெரிய வந்தது .