மத்திய வங்கி ஆளுநர் இலங்கை மக்களுக்கு விடுக்கும் நற்செய்தி


பணவீக்கத்தை குறைப்பது மத்திய வங்கியின் கடமை மத்திய வங்கி அந்த விடயத்தில் சிறந்த முன்னேற்றத்தை காண்பித்துள்ளமை குறித்து திருப்தியடைகின்றேன்  என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  

பௌத்த மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்பு 

மத்திய வங்கி ஆளுநர் இலங்கை மக்களுக்கு விடுக்கும் நற்செய்தி | Governor Of The Central Bank Of Sri Lanka

இது குறித்து அவர் மேலும்  தெரிவிக்கையில், 

பணவீக்கத்தை மேலும் குறைக்க முடியும் என  நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன்,  நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் கூறினார். 

பணவீக்கத்தை குறைப்பது மத்திய வங்கியின் கடமை மத்திய வங்கி அந்த விடயத்தில் சிறந்த முன்னேற்றத்தை காண்பித்துள்ளமை குறித்து திருப்தியடைகின்றேன். 

இது கடந்த வருடம் நாங்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சுமைகளை குறைக்கும், வட்டி வீதம் குறையும் மக்களிற்கு நெருக்கடிகள் இன்றி சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.