புதுடில்லி : ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக அனில் குமார் லஹோட்டி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பு வாரியத்தின் உறுப்பினராக இருந்த அனில் குமார் லஹோட்டி ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராகவும் தலைமை செயல்அதிகாரியாகவும் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து நேற்று டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ரயில்வே வாரிய தலைவராக அனில் குமார் லஹோட்டி பொறுப்பேற்றார்.
இவர் 1984 ஆம் ஆண்டு ரயில்வே சேவைப் பிரிவில் பொறியாளராக பணியைத் துவங்கிவர். கடந்த 36 ஆண்டு காலப் பணியில் மத்திய வடக்கு, வட மத்திய, மேற்கு மற்றும் மேற்கு மத்திய ரயில்வே மற்றும் ரயில்வே வாரியத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement