மும்பை: RAC-ல் இருந்த தனது ரயில் டிக்கெட்டை உறுதி செய்து தருமாறு IRCTC-யிடம் டுவிட்டரில் உதவி கோரிய பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.64,000 பறித்துள்ளனர். டுவிட்டரில் இருந்த மீனாவின் மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டு முதலில் UPI மூலம் ரூ.2 அனுப்பச்சொல்லி நூதன திருட்டில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
