வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: 2023ம் ஆண்டு உலக பொருளாதாரத்திற்கு கடினமான காலம் தான் என்று ஐஎம்எப் கணித்துள்ளது என அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 2023ம் ஆண்டு சர்வதேச பொருளாதாரத்திற்க்கு கடினமான காலம் தான். அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் பொருளாதார செயல்பாடுகள் நலிவடைந்து வருவது காரணமாகும்.

சீனாவில் பயணத் தளர்வுகள் செயல்பாட்டுக்கு வந்தபின்னர் தொற்று பரவலைத் தடுக்க முடியாது. சீனாவுக்கு அடுத்த 2 மாதங்கள் மிகவும் கடினமான காலம்.சீனப் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறை தாக்கங்கள் ஏற்படலாம். அந்த எதிர்மறை விளைவுகள் சர்வதேச பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம்.

ஆனால் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான அமெரிக்கப் பொருளாதாரம் நெருக்கடியையோ அல்லது மந்தநிலையையோ தவிர்க்கும் சூழலே இருக்கிறது. காரணம் அங்கு தொழிலாளர் சக்தி, வலுவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement