4 குழந்தைகளை கொன்ற சிறுத்தை – வருகிறார் வேட்டைக்காரர்… அடங்குமா ஆட்கொல்லி!

Human eating Leopard in Jharkhand : ஜார்க்கண்ட் வனத்துறை சுமார் 50 கேமராக்கள், 1 ட்ரோன், பல அதிகாரிகளை செயலில் இறக்கி ஒரு ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. அந்த பயங்கர சிறுத்தையை பிடிக்க தற்போது புது திட்டம் ஒன்றையும் அம்மாநில வனத்துறை வகுத்திருக்கிறது. 

வனப்பகுதிகள் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் கர்ஹ்வா மாவட்டத்தில் 3 குழந்தைகளையும், லட்டேகர் மாவட்டத்தில் 1 குழந்தையையும் என மொத்தம 4 குழந்தைகளை அந்த சிறுத்தை கொன்றுள்ளது. குறிப்பாக, கடந்த டிச. 10ஆம் தேதிக்கு பின்னர்தான் இந்த நான்கு குழந்தைகளையும் கொன்றுள்ளது. இவர்கள் அனைவரும் 6 முதல் 12 வயதிலானவர்கள். 

தூக்கம் இல்லா இரவுகள்

ராம்கந்தா, ரங்கா மற்றும் பண்டாரியா ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிறுத்தை பெரும் பீதியை கிளப்பியுள்ளது. சூரியன் மறைந்த பிறகு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சிறுத்தை பயத்தில் பல இரவுகளை நாங்கள் தூக்கம் இல்லாமல் கழிக்கிறோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பயப்படுகிறார்கள். மாலையில் ஊரடங்கு உத்தரவு போன்ற சூழ்ல் நிலவகிரது” என்று ராம்கண்டா பகுதியின் விவசாயி ஒருவர் கூறினார். 

அந்த சிறுத்தையை ஆட்கொல்லியாக அறிவிக்க கர்வா வனப்பிரிவு அதிகாரிகள் ஒரு அறிக்கையை மாநில தலைமை வனவிலங்கு காப்பாளரிடம் சமர்ப்பித்தனர். மேலும், ஹைதராபாத்தை சேர்ந்த நவாப் ஷபத் அலி கான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிரிநாத் சிங் உட்பட மூன்று விலங்கு வேட்டயாளர்களின் பெயர்களையும் அறிக்கையின் மூலம் பரிந்துரைத்தது.

வருகிறார் வேட்டைக்காரர்

“ஆட்கொல்லியாக ஒரு விலங்கை அறிவிக்க சில அதிகாரப்பூர்வமாக சம்பிரதாயங்கள் உள்ளன. சிறுத்தையை அமைதிப்படுத்துவதன் மூலம் பிடிப்பதே எங்கள் முதல் முன்னுரிமை, இது நிபுணர்களால் மட்டுமே சாத்தியமாகும். எனவே, எங்கள் முயற்சிக்கு உதவ நவாப் ஷபாத் அலி கானைக் கலந்தாலோசித்தோம். அவர் வேட்டையாடுபவர் மட்டுமில்லை. ஒரு நிபுணர். ஆனால் ஒரு விலங்கைக் கண்டறிந்து கட்டுப்படுத்த லேட்டஸ்ட் உபகரணங்களை வைத்திருக்கிறார், ”என்று மாநில தலைமை வனவிலங்கு வார்டன் சசிகர் சமந்தா கூறினார்.

ஜனவரி முதல் வாரத்தில் கான் வருவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக வனவிலங்குகளின் முதன்மைக் காப்பாளரான சமந்தா தெரிவித்தார். “பிடிப்பது சாத்தியமில்லை என்றால், கடைசி முடிவாகதான் சிறுத்தையை கொல்வோம்” என்று சமந்தா கூறினார். தன்னை ஜார்க்கண்ட மாநில வன அதிகாரிகள் அணுகியதை கான் உறுதிப்படுத்தினார்.

கேமராக்குள் சிக்காத சிறுத்தை 

“ஜார்கண்ட் மாநிலத்திற்குச் சென்று சிறுத்தையைக் கண்காணிக்கவும், அமைதிப்படுத்தவும் உதவுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டனர். இருப்பினும், இது தொடர்பாக எனக்கு அதிகாரப்பூர்வ கடிதம் எதுவும் வரவில்லை” என்று அவர் கூறினார்.

டிசம்பர் 28 அன்று 12 வயது சிறுவன் மிருகத்தால் கொல்லப்பட்ட குஷ்வாஹா கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 50 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் சிறுத்தையின் சாதியப்படும் வழிகளில் வைக்கப்பட்டுள்ளன. 

“கண்காணிப்பு கேமராக்கள் இப்பகுதியில் பல்வேறு விலங்குகளை படம்பிடித்துள்ளன. ஆனால் சிறுத்தை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் தவிர, நாங்கள் ட்ரோன் கேமராக்களையும் பயன்படுத்துகிறோம். ஆனால் அதிலும் சிறுத்தையின் எந்த தடயமும் கிடைக்கவில்லை” என்று கர்வா பிரதேச வன அதிகாரி சசிகுமார் தெரிவித்தார். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவும் திட்டமிட்டு வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.